விஜய் டிவி என்று சொன்னாலே ஒரு சிலரின் பெயரும் முகமும் தான் நம் நினைவுக்கு வரும். அப்படி முதலில் நம் நினைவுக்கு வருபவர் தான் நடிகர் புகழ். இவர் விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்.

சிரிப்பு டா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் அதன் பிறகு வடிவேலு பாலாஜியின் பரிந்துரையின் பெயரில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டிகளாக கலந்து இந்த நிகழ்ச்சியில் வார்த்தைக்கு வார்த்தை கவுண்டர் கொடுத்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரையும் சிரிக்க வைத்தார்.

ஒரு கட்டத்தில் அந்த நிகழ்ச்சியின் செல்ல பிள்ளையாகவே இவர் மாறிவிட்டார். சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இவர் வெள்ளித் துறையில் மிஸ்டர் ஷு கீப்பர் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சிக்சர், துணிவு மற்றும் அயோத்தி என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்று பிசியாக நடித்து வந்த புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தங்களது முதல் திருமண நாளன்று பென்சி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு புகழ் ரிதன்யா என்று பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் புகழ் தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

