கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுந்தபுரமுலோ படத்தில் புட்டபொம்மா பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. விஜயின் பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் இடம்பெற்ற பாடலுக்கு கோரியோகிராப் செய்துள்ளார்.
முக்கியமாக தனுஷ் நித்யா மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படத்தில் மேகம் கருக்குதா பெண்ணை பெண்ணே என்ற பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி கோரியோகிராப் செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் தான் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜானி மாஸ்டரின் டீமில் ஒரு பெண் நடன கலைஞராக வேலை பார்த்துள்ளார்.
21 வயதுடைய அந்த இளம் பெண் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அவர்கள் படப்பிடிப்புக்காக ஹைதராபாத், சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர். அப்போது ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்ததால் ஜானி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜானி மாஸ்டர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, பாலியல் ரீதியாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஒரு நிகழ்ச்சியின் மூலம் அந்த பெண் எனக்கு பழக்கமானார். மைனாராக இருந்தபோது நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று கூறுவது பொய் அவரிடம் திறமை இருந்ததால் அதனை அடையாளம் கண்டு உதவி நடன இயக்குனராக சேர்த்துக் கொண்டேன்.
அந்த பெண் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனரீதியாக தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். பலமுறை மிரட்டவும் செய்திருக்கிறார். எனக்கு எதிராக யாரும் சதி செய்கின்றனர். அந்த பெண்ணின் பின்னால் யாரோ இருந்து எனது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் என்னை இதில் சிக்க வைத்துள்ளனர் என ஜானி மாஸ்டர் கூறியதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் உலா வருகிறது.