பிரித்விராஜ் மூத்த நடிகர்கள் சுகுமாரன் மற்றும் மல்லிகா ஆகியோரின் மகனாவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்தியாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரித்விராஜ். 2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான பிரித்வராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
2006 ஆம் ஆண்டு பாக்யராஜ் அவர்களின் மகளான சரண்யா பாக்யராஜ் உடன் இணைந்து பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரித்திவிராஜ். சரண்யா பாக்யராஜ் நடித்த முதலும் கடைசிமான திரைப்படம் பாரிஜாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து மொழி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் பாராட்டுகளை பெற்றார் பிரித்விராஜ்.
தொடர்ந்து சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன் சமீபத்தில் ஆடிஜிவிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். தென்னிந்தியாவில் மிகவும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ். தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார் பிரித்திவிராஜ். தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் எம்புரான் படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால் நடித்து இருக்கும் இந்த படம் லூசிபர் படத்தின் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் பிரித்விராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் தினமும் என்னுடைய மனைவியை பார்க்கிற.
ஆனா அந்த சந்திப்பு நைட்ல மட்டும் தான் இருக்கு. காரணம் வேலை அதிகமா இருக்கு. நான் என்னைக்குமே போதும் சினிமாவை விட்டு ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்ததில்லை. ஏனென்றால் சினிமாவை தவிர்த்து வேறு எந்த வேலையும் எனக்கு தெரியாது. எல்லோரும் சொல்ற மாதிரி கடன் இருக்கு இஎம்ஐ இருக்கு என்று நான் சொல்ல விரும்பல. இந்த பிரச்சனை பொதுவா எல்லாருக்குமே இருக்கு. நான் ஒரு படம் இயக்குறேன் என்றால் அது என்னுடைய சொந்த பணத்தில் எடுக்கக் கூடியதாக இருக்காது. என்னுடைய கார் மற்றும் வீடு என அனைத்துமே இஎம்ஐ ல தான் இருக்கு. இது சாதாரணமா எல்லோருக்கும் இருக்கக் கூடிய பிரச்சனைதான் என்று பிரித்விராஜ் எமோஷனலாக பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…