தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் தான் பிரேம்ஜி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். நடிகர் பிரேம்ஜி பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த தம்பி ஆவார். தன்னுடைய அண்ணன் படங்களில் நடித்து தனது டைமிங் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

இவருடைய கேங்கிலேயே தொடர்ந்து முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். இதைப் பெருமையாகவும் பல பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பிரேம்ஜி எப்போதும் தனது அண்ணன் வெங்கட் பிரபு படங்களில் மட்டுமே நடிக்க காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பிரேம்ஜி நடிப்பதை ஒரு ப்ரொபஷனாக எடுத்து கொள்ளவில்லை. ஏதோ நாம் படங்களில் நடிக்கிறோம் என்ற எண்ணத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவர் அண்ணன் படங்களை தவிர்த்து ஒரு சில படங்களில் அவர் நடித்திருந்தார். ஆனால் பெரும்பாலும் அவர் அண்ணன் இயக்கும் படங்களில் தான் நடிக்கிறார். இவருடைய நடிப்பை ரசிகர்கள் மிகவும் விரும்புகின்றனர்.

ஆனால் அவர் ரசிகர்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஏதோ ஒரு போக்கில் சென்று கொண்டிருக்கிறார். தனக்கென ஒரு அடையாளத்தை அவர் சினிமாவில் உருவாக்கிக் கொள்ளவில்லை. இவருடைய அப்பா கங்கை அமரன் இளையராஜாவின் சகோதரர் என்றாலும் அவருடைய பெயரை பயன்படுத்திக்கொள்ளாமல் சினிமாவில் தலைக்கன ஒரு அடையாளத்தை வைத்துள்ளார். ஆனால் பிரேம்ஜி அப்படி கிடையாது. ஏதோ போன போக்கில் செல்வோம் என்று சினிமா மீது ஆர்வம் இல்லாமல் ஏதோ நடிக்கிறோம் என்று வெங்கட் பிரபு படங்களில் நடிக்கிறார். இவருடைய காமெடிகள் மற்றும் இசையமைப்பு கூட நன்றாக இருப்பதால் இவர் ரசிகர்களுக்காக தன்னை மாற்றிக்கொண்டு சினிமாவில் தனித்து நிற்க வேண்டும் என பலரும் விரும்புவதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
