நடிகர் பிரசன்னா ஒரு ஜெனிடிக் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தையை காப்பாற்றுவதற்கு உதவி கேட்டிருக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் கனிமொழி என்ற தம்பதியினரின் குழந்தைதான் ஸ்ரீனிகா. இந்த குழந்தை பிறந்த சில நாட்களுக்குப் பிறகு தவக்கவோ எழுந்து நடக்கவும் முயற்சி செய்யாமல் இருந்து வந்திருக்கின்றார். இதை எடுத்து அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட பிறகு குழந்தைக்கு மரபணு பாதிப்பினால் ஏற்படும் எஸ்எம்ஏ என்ற தசைநார் சிதைவு நோய் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மருத்துவர்கள் குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் அதே சமயம் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அந்த பிரத்தியேக ஊசியின் விலை ரூபாய் 16 கோடி என்று தெரிவித்திருக்கின்றார். இந்த ஊசியை குழந்தையின் இரண்டு வயதிற்குள் செலுத்தி விட வேண்டும் இல்லை என்றால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாது என்று கூறி இருக்கிறார்கள்.
இதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் பலரிடமும் உதவி கேட்டு வருகிறார்கள். தங்களது குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி செய்யுமாறு கண்ணீர் உடன் உதவி செய்யுமாறு கேட்டு வருகிறார்கள். இந்த குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்கு ஜூலைசிமா என்ற மருந்து கொண்டுவர வேண்டி இருக்கின்றது. இதன் விலை மட்டும் 16 கோடியாகும்.
இவ்வளவு பெரிய தொகையை அந்த ஒரு குடும்பத்தினரால் கட்டாயம் தயார் செய்ய முடியாது இதனால் அவர்கள் பலரிடமும் தங்களது உதவியை கேட்டு வருகிறார்கள், அதாவது youtube பிரபலங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூஎன்சர் என அனைவரும் இந்த குழந்தைக்காக உதவி கேட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் பிரசன்னாவும் இந்த குழந்தைக்காக உதவி கேட்டிருக்கின்றார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் அவர் தெரிவித்திருந்ததாவது: “இரண்டு வயது கூட ஆகாத ஸ்ரீனிகா என்ற குழந்தை ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி என்ற மரபணு குறைபாடு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு இந்த நோயிலிருந்து அவரை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு மருந்து தான் உள்ளது. அந்த ஒரு மருந்தின் விலை 16 கோடி ரூபாய் ஆகும்.
ஒரு சாதாரண மிடில் கிளாஸ் அப்பா அம்மாவால் இவ்வளவு பெரிய தொகையை தயார் செய்ய முடியாது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து உதவி செய்ய தயாராக வேண்டும். இரண்டு மாதத்திற்கும் குறைவான நேரத்திற்குள் இந்த ஊசியை போட வேண்டும் என்பதால் அனைவரும் உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram