‘அருவி’, ‘டாடா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது காதல் மனைவியைப் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு தனது காதலியைத் திருமணம் செய்துகொண்ட பிரதீப் ஆண்டனிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனவேதனையுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு தவறான நபரைத் திருமணம் செய்துவிட்டேன். எனவே நாங்கள் இருவருமே பிரிந்துவிடலாம் என முடிவெடுத்துள்ளோம். இருப்பினும் என் குழந்தை மீது எனக்கு அதீத பாசமும் அன்பும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிய முடிவெடுத்துள்ளது, அவர்களது ரசிகர்களிடையேயும் திரை உலக வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
