பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் அனுபாமா, மரியம் ஜார்ஜ் மற்றும் சித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் என்னுடன் நடிப்பதற்கு ஹீரோயின் தேடிய போது எல்லோருமே என்னுடன் நடிக்க ரொம்ப தயங்கினாங்க.

ஒருத்தர் கிட்ட போயி நான் தான் கோமாளி டைரக்டர் என்று சொன்னதும் படம் ரொம்ப நல்லா இருந்துச்சு என்று பாராட்டிட்டு இப்ப எடுக்கப் போற படத்துக்கு யார் ஹீரோ என்று கேட்பார்கள். நான்தான் என்று சொன்னதும், உடனே என்ன டேட் சொன்னீங்க ஐயோ அந்த டேட்டா வேற படத்துல கமிட் ஆகிட்டேன் என்னால முடியாது என்று ஏதாவது சாக்கு சொல்லி அப்படியே கடந்துருவாங்க.
![]()
இன்னும் சிலர் இந்த படத்துல பர்பாமன்ஸ் ரொம்ப அதிகமா இருக்கு நான் கொஞ்சம் கம்மியா இருக்க மாதிரி படத்தை தான் பாத்துட்டு இருக்கேன் இது நமக்கு செட்டாகாது என்று சொல்லிடுவாங்க. சில பேர் இல்ல சார் நான் பெரிய ஹீரோ கூட நடிக்க விரும்புறேன் என்று வெளிப்படையாக சொன்னாங்க. அவங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி. இப்படி ஒரு கஷ்டமான பாதையை கடந்து வந்த எனக்கு டிராகன் படத்துல அனுபாமா தான் ஹீரோயின் என்று டைரக்டர் என்கிட்ட சொன்னாரு.

பிரேமம் திரைப்படம் வெளியாகும்போது நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். அப்போ எல்லாம் நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டோம் அனுபவமா நம்ம கூட ஜோடியாக நடிப்பாங்கன்னு. முதல் நாள் படப்பிடிப்பு நடைபெறும் போது நான் பிரேமம் படத்தில் வரும் பாட்டை பாடிக்கொண்டு அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது அனுபாமா வந்ததும் ரொம்ப க்யூட்டா இருந்தாங்க. சூப்பரா நடிச்சாங்க. என் கூட ஜோடியாக நடித்ததற்கு ரொம்ப நன்றி அனுபமா என்று பிரதீப் ரங்கநாதன் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
