முன்னணி நடிகரான பிரபாஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பிரபாஸ் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸ் புகழின் உச்சத்தை அடைந்தார்.
இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்த போது முழங்கால் வலி ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலாம் படத்தின் சண்டைக் காட்சிகள் நடித்த போது பிரபாசுக்கு முழங்கால் வலி அதிகரித்ததாக தெரிகிறது.
டாக்டர்கள் பிரபாஸை அறுவை சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைத்தனர். இதனால் படத்தில் நடித்து முடித்தவுடன் பிரபாஸ் ஐரோப்பா சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சில நாட்களில் பிரபாஸ் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுப்பார் என கூறப்படுகிறது. வருகிற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வரும் பிரபாஸ் சில நாட்கள் ஓய்வு எடுத்து கல்கி மற்றும் மாருதி படங்களில் நடிக்க உள்ளார். ஏற்கனவே பிரபாஸ் நடித்த சலார் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…