நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி சங்கராந்தி பண்டிகை காலத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். அப்போது தி ராஜா சாப் படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ரித்தி குமார் மேடையில் பேசினார்.
அப்போது ரித்தி குமார் கூறியதாவது, பிரபாஸ் சாருடன் தி ராஜா சாப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு புடவையை பரிசாக கொடுத்தார். அது எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதனால்தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு பிரபாஸ் கொடுத்த அந்த புடவையிலேயே வந்திருக்கிறேன் என்றார். இப்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
