Categories: சினிமா

இந்தியா சுதந்திரம் அடைந்ததை ரேடியோவில் அறிவித்த தமிழ் நடிகர்… பூர்ணம் விஸ்வநாதன் பற்றி பலரும் அறியாத தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் பெற்றவர் பூர்ணம் விஸ்வநாதன். அவர் நடித்ததில் தில்லு முல்லு, மகாநதி மற்றும் ஆசை ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் நினைவு கூறப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள முன்னீர்பள்ளம் என்கிற கிராமத்தில் பிறந்த விஸ்வ்நாதன் தென்காசி மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வியை முடித்தார். பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

1945 ஆம் ஆண்டு தன்னுடைய 24-வது வயதில் அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையத்தில், செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது அதை வானொலியில் அறிவித்த பெருமைக்குரியவர் இவரே.

டெல்லியில் வேலை பார்த்துகொண்டே பல மேடை நாடகங்களில் நடித்த அவர் எழுத்தாளர் சுஜாதாவோடு ஏற்பட்ட நட்பின் காரணமாக அவரை நாடகங்கள் எழுத சொன்னார். அவர் எழுதிய பல நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்தார்.

சென்னைக்கு மாற்றலான அவர் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் 70களில் பாலச்சந்தர் மற்றும் பாலு மகேந்திரா ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்னர் நாடகம் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார்.

தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பல வேடங்களில் நடித்த அவர் கடைசியாக விஜய்யின் தமிழன் படத்தில் 2002 ஆம் ஆண்டு நடித்திருந்தார். அதன் பின்னர் உடல்நிலை காரணமாக நடிப்பதைத் தவிர்த்த அவர் 2008 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

இன்றளவும் அவரின் பிரத்யேகமான குரலை மிமிக்ரி கலைஞர்கள் பயன்படுத்தி அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

vinoth

Recent Posts

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

49 seconds ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

11 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

15 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

15 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

20 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

26 minutes ago