தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால் இந்த காதலுக்கு சீதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் இருவரும் சந்தித்துக் கொள்ளவே முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் அவரைக் கடத்திக்கொண்டு சென்றுதான் திருமணம் செய்துள்ளார் பார்த்திபன். அதன்பின்னர் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வந்த பார்த்திபன் சீதா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் பார்த்திபனும் சீதாவும் விவாகரத்து செய்து பிரிந்தனர். திருமணம் தன் வாழ்வில் தான் எடுத்த ஒரு மோசமான முடிவு என்று பின்னாளில் சீதா தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தற்போது வரை இருவரும் சினிமாவில் பிஸியாகப் பணியாற்றி வருகிறார். பார்த்திபன் அடுத்தடுத்து தனது வித்தியாசமானக் கனவுகளுக்கு திரைவடிவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பார்த்திபன் இதுவரைப் பகிர்ந்துகொள்ளாத தன்னுடைய தந்தையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் “நான் என் வாழ்க்கையில் சிகரெட் புகைத்ததே இல்லை. ஏனென்றால் என் அப்பாதான் அதற்குக் காரணம். அவர் கவர்னர் பீடி என்று ஒன்றைக் குடிப்பார். அதனால் அவர் புற்றுநோய் பாதித்து இறந்தார். அந்த பீடிக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. அதனால் நான் சிகரெட் குடித்ததே இல்லை. ஆனால் சினிமாவில் மட்டும் நான் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…