தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் பாண்டு. இவர் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் எண்ணற்ற திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி என இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள் ஏராளம். தென்னிந்தியாவில் ‘ஓவியத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் முனைவர் பட்டம்’ வாங்கிய ஒரே நபர் இவர் தான். இவர் முதன்முதலாக எம்ஜிஆர் நடித்த குமரிக்கோட்டம், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பை பெற்றார்.
உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை ,ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார். நடிகர் பாண்டு குமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இத்தம்பதியினருக்கு பிரபு , பஞ்சு மற்றும் பிண்டு என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் பிண்டு என்பவர் ‘வெள்ளச்சி’ என்னும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நடிகர் பாண்டு மகன் பிண்டுவின் லேட்டஸ்ட் இன்டெர்வியூ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அட இவர்தான் நடிகர் பாண்டுவின் மகனா..? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…