‘இப்படித்தான் விளையாடணும்’… மகனின் நண்பர்களுக்கு FOOTBALL சொல்லிக் கொடுத்த ‘தல’ அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

   

தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். நடிகை ஷாலினி சமீபத்தில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். இதன் மூலமாக தல அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது.

சினிமாவில் பிசியாக இருக்கும் தல எப்பொழுதும் தனது குடும்பத்துக்காகவும் நேரத்தை செலவிட கூடியவர். தற்பொழுது இவர் தனது மகனின் பள்ளிக்கு சென்று அங்கு அவருடன் footbal விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை தல ரசிகர்கள் படுவைரலாக்கி வருகின்றனர்.