பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சிறகடிக்க ஆசை வரை.. இந்த சீரியல்களில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவர் தானாம்..!!

By Priya Ram

Published on:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்ட நாள் முதல் என்ற சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் நவீன். மேலும் இதயத்தை திருடாதே என்ற சீரியலிலும் இவர் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற போதும் சில சூப்பர் ஹிட் சீரியல்களில் நடிக்க வந்த வாய்ப்பை நவீன் தவற விட்டுவிட்டார். அது குறித்து பார்ப்போம். முதலாவதாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நவீனை நடிக்க அணுகி உள்ளனர்.

ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனையடுத்து சிறகடிக்க ஆசை, சக்திவேல், தங்கமகள், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயம் ஆகிய சீரியல்களிலும் நடிக்க நவீனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வித்தியாசமான மற்றும் கிராமத்து கதைகளும் கொண்ட சீரியலில் நடிக்க நவீனுக்கு ஆர்வம் இருந்தது.

இதனால் அந்த சீரியல்களில் நடிக்காமல் விட்டுவிட்டார். அதன் பிறகு சின்ன மருமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததால் அதில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram