Categories: சினிமா

275 ரூபாய் சம்பளத்துக்காக Air Force வேலையில சேர்ந்தேன்… 29 வயசுல அப்பா கேரக்டர்ல நடிச்சேன்… மனம் திறந்த நடிகர் நாசர்…

Spread the love

நாசர் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நாசர். இந்திய விமானப்படையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால் சினிமாவிற்கு வந்தார் நாசர்.

திரைப்பட கல்லூரியில் நடிப்பை கற்று தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் நடிப்பு பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார் நாசர். இவரது ஆர்வத்தை கண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் கல்யாண அகதிகள் என்ற படத்தில் மூலம் சினிமாவில் நாசருக்கு வாய்ப்பு அளித்தார். அன்றிலிருந்து 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் நாசர். இவர் சிறந்த குணச்சித்திர நடிகரும் ஆவார்.

தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், வரவு எட்டணா செலவு பத்தணா, போக்கிரி, படையப்பா, ஜீன்ஸ், தாமிரபரணி என பல திரைப்படங்கள் இவரது நடிப்பு திறனுக்கு சான்றாக இருக்கிறது. மேலும் இவர் தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். எந்த கதாபாத்திரமானாலும் மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர் நாசர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நாசர் சினிமாவிற்குள் தான் வந்த தனது ஆரம்பகால பயணத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

நாசர் கூறியது என்னவென்றால், நான் நடிப்பு பயிற்சி பெற்ற இடத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அப்போது பணம்தான் பெரிதாக தெரிந்தது. நான் விமானப்படையில் 275 ரூபாய் சம்பளத்துக்காக தான் நான் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு நடிப்பதற்கு வந்ததற்குப் பிறகு எந்த கதாபாத்திரமானாலும் எனக்கு நடிப்பதற்கு மிகவும் பிடிக்கும். நான் 29 வயதிலேயே ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் நம்மை ஒரு வயதான தோற்றத்தில் நடிக்கிறோமே என்ற ஒரு பெருமையும் எனக்கு இருந்தது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு என்னுடைய கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் பிடிக்கும் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் நாசர்.

admin

Recent Posts

கிருஷ்ணகிரியில் அதிரவைக்கும் சம்பவம்… நீதிமன்றம் சென்ற நபர் காட்டில் சடலமாக மீட்பு…. 4 நாட்களுக்குப் பின் வெளியானபகிர் தகவல்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…

5 minutes ago

26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…

16 minutes ago

“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…

23 minutes ago

BREAKING: திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி… சற்று முன் பரபரப்பு…தமிழா அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…

32 minutes ago

“பாப்பா-வா?… பாப்பானா?… செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி உளறிய அந்த ஒரு வார்த்தை… திமுக-வை கதறவிட்ட அமைச்சர் ரமேஷ்…!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர்…

35 minutes ago

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி… எடப்பாடிக்கு டாட்டா காட்டிய பொன் ஜெயசீலன்… உடைந்தது ரகசியம்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…

41 minutes ago