தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் நடிகராக 90களில் கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன். இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் சினிமா மற்றும் அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். நெப்போலியன் மூத்த மகனுக்கு அரியவகை தடைப்பிடிப்பு நோய் இருந்ததால் சரியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றனர். அங்கு நெப்போலியன் ஐடி கம்பெனி உருவாக்கி பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தார். பிறகு இந்த பொறுப்புகளை எல்லாம் மூத்த மகன் தனுஷின் கையில் ஒப்படைத்தார். இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியில் வசிக்கும் அக்ஷயா என்ற பெண்ணை தனது மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்ய நிச்சயத்தார்.
அது தொடர்பான தகவலை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில், தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டு அங்கு சமீபத்தில் மிக பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். இந்த திருமணத்தை கோலாகலமாக தமிழ் முறைப்படி நடத்த விரும்பிய நெப்போலியன் தனது மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் பயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். திருமணம் விமர்சையாக நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் முடிந்த கையோடு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
எப்படி அந்தப் பெண் தனுஷை திருமணம் செய்து கொண்டார் என்று பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக நெப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய பையன பத்தி எனக்கு நல்லா தெரியும். ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒரு சிலர் என்னுடைய மகன் பற்றி தெரியாமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது எதற்காக அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். என் மகன் எவ்வளவு மன தைரியம் உள்ளவர் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். தனக்கு என்ன நடந்தாலும் என்னுடைய மகன் ரொம்பவும் தைரியமாக எடுத்துக் கொள்கின்றான்.
எங்களுக்கும் அவன் தான் பக்க பலமா இருக்கான். அவருக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப்போல இருக்க எல்லா அப்பாவும் இதுதான் நினைப்பாங்க. என்னோட பையனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. சிலர் சம்பந்தமே இல்லாம தப்பு தப்பா பேசிட்டு இருக்காங்க. இது இன்னொருத்தரின் குடும்பத்தையும் அவர்களுடைய மனதையும் பாதிக்கும் என்று யாரும் புரிந்து கொள்ளாமல் செய்கிறார்கள்.
ஆனா இதையெல்லாம் நானும் என்னுடைய குடும்பத்தினரும் கண்டு கொள்வதில்லை. என்னுடைய மகன் சந்தோஷமாக இருக்க வேண்டும். என்னுடைய மருமகள் என்னுடைய மகனை சிறுவயதில் இருந்து பார்த்து தான் திருமணம் செய்து இருக்கிறார். அவங்க குடும்பத்தினரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் தான் திருமணம் நடைபெற்றது. இது தெரியாமல் சிலர் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நெப்போலியன் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…
டெல்லியைச் சேர்ந்த ' பெஜெயின்டில் ' என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க…
நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…
ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த…
ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…