மனைவியின் சிறுவயது புகைப்படத்தை வீடியோவாக வெளியிட்டு.. பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..!

By Mahalakshmi on ஜூலை 26, 2024

Spread the love

நடிகர் நகுல் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நகுல். அதைத்தொடர்ந்து பாடகராகவும் வலம் வந்தார். 2007 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் நகுல்.

   

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரால் ஒரு முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் தமிழில் ஒரு சில பாடல்களையும் பாடியிருக்கின்றார்.

 

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவர் 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அக்கிரா என்கின்ற மகளும், அமோர் என்கின்ற மகனும் இருக்கிறார்கள்.

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் நகுல், ஸ்ருதி குழந்தையாக இருந்து வளர்ந்தது வரை உள்ள புகைப்படங்களின் தொகுப்பை ஒரு வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.