#BREAKING : நடிகர் முத்துக்காளை மனைவி உயிரிழந்தார்.. சற்றுமுன் சோகம்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!

Spread the love

பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47), உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான தொற்று பாதிப்பால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, கடந்த 17 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவியின் (Ventilator) உதவியுடன் அவர் போராடி வந்த நிலையில், இந்த சோக முடிவு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, தனது மனைவியின் மருத்துவச் செலவுகளுக்கும் உயர்தர சிகிச்சைக்கும் உதவி கோரி நடிகர் முத்துக்காளை கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாகச் செயல்பட்ட முதல்-அமைச்சர், அமைச்சர் ராஜ்மோகனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாலதிக்குத் தேவையான அனைத்து அதிநவீன உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் தங்குதடையின்றி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அரசின் விரைவான நடவடிக்கையால் அதிநவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், மாலதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் இன்று காலை அவர் உயிரிழந்தார். திரையுலகினரையும் ரசிகர்களையும் சிரிக்க வைத்த நடிகர் முத்துக்காளை, தற்போது தன் வாழ்நாளின் பெரும் துணையை இழந்து, மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதக் காட்சி காண்போரை நெஞ்சை உருக வைக்கிறது. அவரது மறைவுக்குத் திரையுலகினரும் பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

#WATCH | நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் முத்துக்காளை​#muthukalai #wifedeath #News18TamilNadu pic.twitter.com/jZou90yKKy

— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 18, 2026

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

52 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

53 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

60 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

1 மணத்தியாலம் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago