Categories: சினிமா

நான் ஹீரோவாகனும்னு சொன்னபோது எங்கப்பாவே அப்படி சொல்லிட்டாரு… அம்மாவைப் பற்றி பேசும்போது எமோஷனல் ஆன முரளி!

Spread the love

பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். 99 படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பகல் நிலவு திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது. அதன் பிறகு முரளி நடித்த புது வசந்தம், இதயம் கடல் பூக்கள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

கடல் பூக்கள் திரைப்படத்தில் நடித்ததற்காக முரளிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. முரளி முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, கார்த்திக், பார்த்திபன், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகைகளான மீனா, ரோஜா, சிம்ரன், தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். எதிர்பாராத விதமாக முரளி 2010 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

தற்போது முரளியின் வாரிசுகளான அதர்வா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் முரளி அதிகமாக நடித்தது தமிழ் படங்களில்தான். அவரைக் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதும் தமிழ்நாட்டு மக்கள்தான்.

முரளியின் அப்பா சித்தலிங்கையா புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். அவர் கன்னடத்தில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவரிடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய முரளி, ஹீரோ ஆகவேண்டுமென்ற ஆசையைத் தன்னுடைய தந்தையிடம் கூறினாராம்.

ஆனால் அவரின் தந்தை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். அப்போது முரளி தன்னுடைய அம்மாவிடம் சென்று சொல்ல, அவர்கள்தான் “யார் யாரையோ வைத்து படம் எடுக்கிறீர்கள் நம்ம பையன வச்சு எடுத்தா என்ன?” என்று சொல்லி அவரை சம்மதிக்கவைத்துள்ளார். அப்போதும் அரைமனதாகவே ஒத்துக்கொண்ட முரளியின் தந்தை “இந்த பணம் திரும்ப வருமா என்று தெரியவில்லை. உனக்காக இதை மொய்யாக வைக்கிறேன்” என்று சொல்லிதான் படம் எடுத்தாராம். ஆனால் 25 லட்சத்தில் எடுத்த அந்த படம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாம். இதை இறப்பதற்கு முன்னர் அளித்த ஒரு நேர்காணலில் முரளி தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

2 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

5 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

9 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

12 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

16 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

19 minutes ago