தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ‘புரட்சித்தலைவர்’… 72 நாள் கால்ஷீட்டுக்கு MGR வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா..?

By Begam

Published on:

எம்.ஜி. ராமசந்திரன் அவர்கள் தமிழ் சினிமாவில் ‘புரட்சி தலைவர்’ என கோடானகோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், ஏன் கொண்டாடப்பட்டு வருபவர் எம்.ஜி.ஆர் எனும் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். இவர் தமிழ் சினிமாவில் 1936ல் வெளிவந்த ‘சதி லீலாவதி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

   

இதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கிய எம்.ஜி.ஆர் காலம்கடந்து நிலைத்து நிற்கும் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். ஆயிரத்தில் ஒருவன், நம் நாடு, எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, அடிமைப்பெண் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நடிகராக மட்டுமல்லாமல் அரசியலிலும் களமிறங்கி தனது ஆளுமையை நிரூபித்தார்.

தமிழ் சினிமாவில் 60 களிலேயே லட்சங்களில்  சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒரே நடிகர் எம்ஜி ராமச்சந்திரன் அவர்கள் தான். . எம்ஜிஆர்  நடிப்பில் ஏவிஎம் தயாரித்த வண்ண படம் தான் ‘அன்பே வா’ திரைப்படம். இந்தப் படத்துக்காக மொத்தம் 72 நாள்கள் கால்ஷீட் தந்தார் எம்ஜி ராமச்சந்திரன். இதற்கு 3 லட்சம் சம்பளம் கேட்க,   ஏவிஎம் நிறுவனம் ஒத்துக் கொண்டது.

ஹீரோயினாக சரோஜாதேவி நடிக்க,   டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோயின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மேலும், 25 ஆயிரம் ரூபாய் வேண்டும் என எம்ஜி ராமச்சந்திரன் கேட்க, அதுவும் தரப்பட்டது. அப்படி அன்பே வா படத்துக்கு மொத்தமாக 3.25 லட்சங்கள் சம்பளமாக எம்ஜி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். எம்ஜிஆர் அவர்களின் 60 களிலேயே  லட்சங்களில் இருந்தது என்பதை ‘அன்பே வா’ திரைப்படம் நிரூபித்துள்ளது. இதனை ஏவிஎம் நிறுவனம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.