ஒரு நடிகையால் வந்த பிரச்சனை.. MGR-ஐ சேரை தூக்கி அடிக்கப் போனாரா சந்திரபாபு..? நடந்தது இதுதான்..

By Sumathi

Updated on:

கருப்பு, வெள்ளை தமிழ் சினிமா காலத்தில், முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்திரபாபு. புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எல்லாருமே சின்னவர் என மரியாதையாக சொல்ல, சந்திரபாபு மட்டும் மிஸ்டர் ராமச்சந்திரன் என்றுதான் அழைப்பார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடிக்கும் போது அவர்களை விட ஒரு ரூபாய் கூடுதல் சம்பளம் கொடுத்தால்தான் இந்த படத்தில் கறாராக சொல்லிவிடுவது சந்திரபாபுவின் வழக்கம். அப்படித்தான் சம்பளமும் பெற்றிருக்கிறார். அந்த காலத்தில், சினிமா நடிகர்களில் மிக ஆடம்பரமாக வாழ்ந்த மனிதர் என்றால் அது சந்திரபாபு மட்டும்தான்.

Chandrababu

   

ஒரு கட்டத்தில், எம்ஜிஆரை கதாநாயகனாக வைத்து, மாடி வீட்டு ஏழை என்ற படத்தை சந்திரபாபு டைரக்ட் செய்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அந்த படத்தின் கதாநாயகி, சந்திரபாபுவின் நெருங்கிய தோழியான சாவித்திரி. அவர் வேட்டைக்காரன் படத்தில் எம்ஜிஆருடன் நடித்த போதே உடல் பருமனாக காட்சியளிப்பார். அதற்கு சில ஆண்டுகளுக்க பிறகு இந்த படம் எடுத்த போது இன்னும் பலமடங்கு குண்டாக காணப்பட்டுள்ளார். படத்தின் சில காட்சிகளை பார்த்த எம்ஜிஆர், இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தால் சரியாக வராது, மாற்றி விடுங்கள் என சந்திரபாபுவிடம் கூறியிருக்கிறார். ஏனெனில் எம்ஜிஆருடன் நடிக்கும் நாயகிகள் ஒல்லியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ரசிகர்களும் அதையே விரும்புவார்கள்.

Chandrababu

மாடி வீட்டு ஏழை படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க, ரூ. 25 ஆயிரம் அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது. அந்த பணத்தை சந்திரபாபுவுக்கு தந்ததே சாவித்திரிதான் என்ற நிலையில், எப்படி கதாநாயகிகளை மாற்ற முடியும் என்ற நிலையில், எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணியிடம் சென்று சந்திரபாபு பேசி இருக்கிறார். இந்த விவரங்களை சொல்லியும் இருக்கிறார். அதற்கு அவர், மிக குண்டாக உள்ள சாவித்திரியுடன் நிச்சயமாக சின்னவர் (எம்ஜிஆர்) நடிக்க மாட்டார். நீ ஒரு கத்துக்குட்டி. உனக்கு படம் எடுக்க தெரியாது. எம்ஜிஆரை போன்ற பெரிய நடிகரை வைத்து உன்னால் படம் எடுக்க முடியாது.

Chandrababu

நீ ஒரு ஆசை நடிகன். உனக்கு இது சரியாக வராது. போய்விடு என்று எம்.ஜி சக்கரபாணி கூறியிருக்கிறார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த சந்திரபாபு, கத்தியபடி சேரை கையில் தூக்கி இருக்கிறார். ஆனால் யாரையும் அடிக்கவில்லை. ஆனால், அவர் அடித்துவிட்டதாக வதந்தி பரவிவிட்டது. இதற்கு பிறகும் தனது வீட்டை அடமானம் வைத்து, இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து அந்த படத்தை சந்திரபாபு எடுத்தார். ஆனால் 2 ஆயிரம் அடியோடு அந்த படம் நின்றுபோனது என, சந்திரபாபுவின் சகோதரர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi