“ஜெயிலர்” படம் போல “லியோ” படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் என் மீசையை எடுத்துடுறேன்….. பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்…!!

By admin on புரட்டாதி 12, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்திருக்கும் படம் லியோ இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லியோ படத்தின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக பலரும் அது குறித்து பேசி வருகின்றனர்.

   

லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னரே வியாபாரம் 400 கோடிக்கும் அதிகம் என கூறப்படும் நிலையில் படத்தின் மொத்த வசூல் 1000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், லியோ படம் 1000 கோடியை வசூல் செய்யவே செய்யாது.

   

 

ஜெயிலர் படம் நாளுக்கு நாள் அதிகமாக வசூல் செய்கிறது. அப்படி இருக்க ஜெய்லர் படத்தின் வசூலை லியோ படத்தால் முறியடிக்க முடியாது. அப்படி நடந்தால் எனது மீசையை எடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு தெரியும்.

ஆனால் நடிகர் விஜயை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும். அதை தாண்டி வேறு எங்கு சென்றாலும் நடிகர் விஜய் பற்றி தெரியாது என்பது போல மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார். ஆரம்பத்திலிருந்து நடிகர் விஜய் விட நடிகர் ரஜினிகாந்த் தான் எல்லாவற்றிலும் மேல் என்பது போல காரசாரமாக பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic Admin (@ssmusicofficial)