தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா முதன்முதலில் நேருக்கு நேர் திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். இப்படியான நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்து நேருக்கு நேர் சூர்யா சினிமாவில் அறிமுகமானது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சூர்யா திருப்பூரில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தார். அப்போது வசந்த் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. இதனால் தனது வேலையை டிசைன் செய்ய கம்பெனியில் சென்று நான் சினிமாவில் நடிக்கப் போறேன் என்று சூர்யா கூறியுள்ளார்.
உனக்கெல்லாம் யாரு சினிமாவுல வாய்ப்பு கொடுத்தாங்க நீ ஹீரோவா நடிக்க போறியா என்று அங்கிருப்பவர்கள் கிண்டல் செய்துள்ளனர். வசந்த் இயக்கத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் யாருமே நம்பவில்லை. உனக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று அனைவரும் கிண்டல் செய்த நிலையில் அப்போதுதான் சூர்யா நான் தான் நடிகர் சிவகுமாரின் மகன் என்று கூறியுள்ளார். அதாவது மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த சூர்யா தன் அப்பா தான் சிவகுமார் என்பதை வெளியில் சொல்லாமலேயே சாதாரண ஒரு நபர் போல அங்கு வேலை பார்த்துள்ளார். ஏனென்றால் சிவக்குமார் நீ என்னுடைய பையன் என்று சொல்லாமல் என் பெயரை பயன்படுத்தாமல் வேலை பார்க்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதால் சூர்யா அதனை மறைத்துள்ளார்.
இதனைக் கேட்டு அங்கிருந்த அவர்கள் ஆச்சரியமடைந்து சாரி கேட்டு படத்தில் நடிக்க வாழ்த்தி அனுப்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிவகுமார் என்னதான் சினிமாவில் நடித்திருந்தாலும் சூர்யாவுக்கு நடிப்பு குறித்த எந்த ஒரு ரசனையுமே கிடையாது. ஏதோ ஒரு எதார்த்தமாகத்தான் சினிமாவில் நுழைந்தார். வசந்த் கிட்ட எவ்வளவு பெரிய நடிகரும் நடிப்பது ரொம்ப கஷ்டம். அப்படிப்பட்ட அவருடன் சூர்யா முதல் படத்தில் இணைந்து ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாரு.
அதுவும் முதல் படத்திலேயே முதல் காட்சியில் சிம்ரனை கட்டிப்பிடிக்கும் காட்சி தான் இருந்தது. படம் முழுவதுமே ஒரு பயத்தோட தான் நடிச்சு முடிச்சாரு. டப்பிங் பேசும்போது கூட ரொம்ப பயந்தாரு. அவருக்கு டப்பிங் பேச விக்ரமை அழைத்து வந்து அது சரிப்பட்டு வராததால் இறுதியாக சுகாசினி டப்பிங் ரூமுக்குள் வந்து சூர்யாவுக்கு ஊக்கமளித்த நிலையில் டப்பிங் பேசி முடித்தார். என்னதான் இருந்தாலும் முதல் படம் முழுவதுமே சூர்யா ஒரு பயத்தோடு தான் நடித்தார் என்று மாரிமுத்து பேசியுள்ளார்.