தினமும் வடிவேலு காமெடியை பார்த்து தூங்கிய விஜயகாந்த்.. காரணம் இதுதானா?.. உண்மையை உளறிய நடிகர் இளவரசு..!

By Nanthini on பங்குனி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்..” கேப்டன் விஜயகாந்த்..!! –  Madhimugam

   

ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு  உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

   

Vadivelu - அவனுக்கு அவ்ளோதான் அறிவு.. வடிவேலு காமெடி பார்த்துட்டுதான்  தூங்குவேன்.. விஜயகாந்த் சொன்ன சீக்ரெட் | Ilavarasu Talks about Vijayakanth  And Vadivelu Issue ...

 

இப்படியான நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து நடிகர் இளவரசு சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எம்எல்ஏ ஆனபிறகு எங்கள் ஆசான் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அப்போது அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அரசியல் எப்படி இருக்கு என்று கேட்டேன், உடனே அவரு பெரிய தலைவலியா இருக்கு, எம்எல்ஏவா இருக்கிறது கூட பிரச்சனை இல்ல இந்த கட்சிக்காரங்க கூட போராடவே முடியல என்று சொன்னாரு. நைட் ஃபுல்லா ரொம்ப தலைவலியா இருக்கும் பேசாம வடிவேல் காமெடி போட்டு சிரிச்சிட்டே படுத்து விடுவேன் என்று சொன்னாரு.

TnNews24Air | வடிவேலுவை அடிக்கலையா என கேட்ட விஜயகாந்த்! .....வடிவேல் -  விஜயகாந்த் மோதல் உண்மையை உடைத்த நடிகரின் பகீர் தகவல்!....

அவர் அப்படி சொன்னது நான் ஷாக் ஆயிட்டேன். ஏனென்றால் அப்போது வடிவேலு திமுகவில் இருந்து கொண்டு விஜயகாந்துக்கு எதிராக மேடை மேடையாக பல அவதூறு கருத்துக்களை பரப்பியது மட்டுமல்லாமல் விஜயகாந்த் குறித்து தரகுறைவாகவும் பேசி வந்தார். அப்படி இருக்கும்போது எப்படி இவர் வடிவேலு காமெடியை பார்க்கிறார் என்று சொன்னதும் நான் ஷாக் ஆகுற மாதிரி ரியாக்ஷன் கொடுத்தேன். உடனே அதனை புரிந்து கொண்ட விஜயகாந்த் அட அவன் கிடக்கிறான் போயா அவன் பேசிட்டு போறான் என்று சொல்லிட்டு நைட்டுல அவன் காமெடியை போட்டுட்டு சிரிச்சிட்டு தான் டெய்லி தூங்குறேன் என்று சொன்னார். உண்மையிலேயே அப்போ இதுதான் நடந்துச்சு என்று இளவரசு பேசியுள்ளார்.