Categories: சினிமா

மூன்றே நாளில் உருவான பாக்யராஜ் படம்.. பாரதிராஜா கிட்ட வாலாட்டிய மனோபாலா.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர்களில் ஒருவர்தான் மனோபாலா. இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். இப்படி பல புகழுக்குரிய மனோபாலா கடந்த வருடம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான நிலையில் மனோபாலா பாரதிராஜா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெறும் மூன்றே நாளில் உருவானது தான் புதிய வார்ப்புகள் கதை. இந்த படத்திற்கு கதாநாயகி முடிவாயிட்டாங்க ஆனா கதாநாயகன் மட்டும் கிடைக்கல. லக்ஷ்மிகாந்த் என்ற போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுக்கணும்.

அதே சமயம் என்னோட டைரக்டர் கிட்ட நான் இருக்கும்போது கதாநாயகன் கதாநாயகி எல்லாம் நான்தான் ஃபோட்டோ எடுப்பேன். கதாநாயகன் மட்டும் கிடைக்கல மத்ததெல்லாம் ரெடி ஆகி படத்தின் சூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க. அன்னைக்கு கண்ணதாசன் முதல் முறையா நாம் பக்கத்துல பார்த்தேன். அது மட்டுமல்லாமல் அவர் எழுதற வரிகள காப்பி எடுக்கிற வேலை எனக்கு கிடைத்தது. காப்பி எடுத்து மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுத்து டேக் போயிட்டு இருக்கு. அப்போ பாரதிராஜா என்ன கூப்பிட்டு லஷ்மிகாந்தை கூட்டிக்கிட்டு கூடவே பாக்கியராஜையும் கூட்டிட்டு வா. ஒரு ஊரில் இருந்து வரும் வாத்தியார் எப்படி இருப்பாரோ அதுபோல கையில ஒரு பெட்டியை கொடுத்துட்டு பெரிய கண்ணாடி போட்டுட்டு குடையும் பிடிச்சுகிட்டு இருக்க மாதிரி ஒரு போட்டோ எடு என்று என்கிட்ட சொன்னாரு.

 

என்ன சார் சொல்றீங்க அவர் ஹீரோவா என்று நான் கேட்டதும் பேசாம போட்டோவை எடு என்று சொல்லிட்டாரு. டயலாக் எழுதிட்டு இருந்த ராஜனை கூப்பிட்டு வந்து உச்சகட்ட கடுப்புல அன்னைக்கு நான் போட்டோ எடுத்தேன். அப்படிதான் முதன் முதலில் நான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேரும் போது நிறைய சிகரெட் குடிப்பேன். முதல் முறை அவரை சந்திக்க செல்லும்போது என் பேரு மனோபாலா கமல்ஹாசன் உங்ககிட்ட அனுப்பி வச்சாரு என்று ஒரு திமிரா பேசுன.

 

சரின்னு அவரும் என்னை உள்ள கூட்டிட்டு போய் கதைய சொன்னாரு. பாதி கதையை கேட்டதும் அவர வெளியில கூட்டிட்டு வந்து இது சுத்தமா ஓடாது என்று நான் சொல்லிட்டேன். நிறைய படம் பாக்குறவன் நான் எனக்கு நிச்சயம் தெரியும் இந்த கதை ஓடாது என்று வெளிப்படையாக அவர்கிட்ட சொன்ன. அன்னைக்கு அவர் புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிக்க போறாரு. அப்போ பாக்கியராஜ் எங்க என்று நான் கேட்டதும் அவனை திட்டி அனுப்பிச்சிட்டேன் என்று என்கிட்ட சொன்னாரு. உடனே நான் போய் பாக்கியராஜை சமாதானப்படுத்தி அன்னைக்கி கூட்டிட்டு வந்த என்று பாரதிராஜா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மனோபாலா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

1 minute ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

5 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

9 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

13 minutes ago

பதவி பறிபோகாதா?.. ஆனால் ‘ஷாக்’ காத்திருக்கு…. அமைச்சரவை மாற்றத்தில் CM விஜயின் மாஸ் மூவ்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…

16 minutes ago