Categories: சினிமா

மௌன ராகம் படத்துக்கு ரசிகர் சொன்ன விமர்சனம்… அதன் பின்னர் தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதையே நிறுத்திய மணிரத்னம்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மூத்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றோ அல்லது அவுட்டேட் ஆகியோ வெளியேறிவிடும் நிலையில் மணிரத்னம் தன்னுடைய 70 ஆவது வயதிலும் பிஸியான இயக்குனராக வலம் வருகிறார்.

மணிரத்னம் முதலில் இயக்கிய தமிழ் படம் இதயக் கோவில். அதன் பிறகு பகல் நிலவு படத்தை இய்க்கினார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமாக அமையாததால் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் தனது முதல் ஹிட்டை மௌனராகம் திரைப்படத்தின் மூலமாகதான் கொடுத்தார்.

அதன் பின்னர் அவருக்கு என்று பிராண்ட் வேல்யூ உருவானது. நாயகன், தளபதி என அடுத்தடுத்து அவரின் கிராஃப் எகிறிக் கொண்டே சென்றது. ரோஜா மற்றும் பம்பாய் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். அதனால் இந்தி சினிமாவிலும் அவருக்கு நல்ல பெயர் உருவானது. இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இடையில் அவருக்கு பல வருடங்களாக ஹிட் இல்லாமல் இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் மூலமாகக் கம்பேக் கொடுத்தார்.

இந்நிலையில் மணிரத்னம் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய படங்களைத் திரையரங்குக்கே சென்று பார்ப்பதில்லை எனக் கூறியுள்ளார். அதில் “நான் என்னுடைய மௌன ராகம் படத்தை ஒரு புறநகர் தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அப்போது படம் பார்த்த ஒரு முதியவர் “என்னையா இவன், டைவெர்ஸ் கேக்குறவள ஒரு அறை அறையுறத விட்டுட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருக்கான்” என சொன்னார். அப்போதில் இருந்து நான் தியேட்டர்களுக்கு சென்று என்னுடைய படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

7 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

8 மணத்தியாலங்கள் ago