Categories: சினிமா

ஜெய்பீம் இயக்குனரைப் பார்க்கவே பிகு பண்ணிய மணிகண்டன்… ஒரு வேல மிஸ் பண்ணிருந்தா என்ன ஆகிருக்கும்?

Spread the love

காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன்.  அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில்  நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்றது.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்னைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.

இதையடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இளம் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தியுள்ளார் மணிகண்டன். இந்நிலையில் தனக்குத் திருப்புமுனையாக அமைந்த ஜெய்பீம் பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்பது பற்றி மணிகண்டன் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

அதில் “நான் ஒரு பட ஷூட்டிங்குக்காக பழனிக்கு 40 நாட்கள் சென்றிருந்தேன். அப்போது ஜெய்பீம் படக்குழுவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் இப்போதைக்கு வரமுடியாது என சொல்லிவிட்டேன்.சரி என அவர்கள் 40 நாட்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். ஷூட்டிங் முடிந்து வந்தும் நான் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டேன்.

அப்போது இயக்குனரே எனக்கு போன் செய்து ‘நான் உங்களை ஒருமணிநேரம் சந்திக்க வேண்டும் என்றுதான் கேட்டேன். அது எப்போது முடியும் என சொல்லுங்கள் எனக் கேட்டார். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அதன் பின்னர்தான் நான் அவரை சென்று சந்தித்து ஜெய்பீம் படத்தில் எனது பயணம் தொடங்கியது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

7 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

16 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

25 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

27 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

34 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

37 minutes ago