நாகேஷூக்கு அப்புறம் உன்னை தான் அப்படி பார்க்கறேன் – இளம் நடிகரை மனம் விட்டு பாராட்டிய இயக்குனர் கே பாலசந்தர்!

By Elango on மார்கழி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்து இப்போது நடிகராக வளர்ந்து வருபவர் மணிகண்டன். காலா ஜெய்பீம் நெற்றிக்கண் குடும்பஸ்தன் லவ்வர் குட்நைட் ஏலே என பல படங்களில் நடிகர் மணிகண்டன் நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து 3 ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். மணிகண்டன் மிக பிரமாதமான மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, ஒரு நாள் நான் திக்குவாய் கேரக்டரில் நடித்த குறும்படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் சார் பார்த்து இருக்கிறார். அந்த படத்தை பார்த்துட்டு, அந்த பையனை நான் பார்க்கணும்ன்னு சொல்லி என்னை கூப்பிட சொல்லி இருக்கிறார். எனக்கு அவர் பார்க்க விரும்புவதாக தகவல் கிடைத்ததும் நான் அங்கு போனேன்.

   

என்னைப் பார்த்ததும் நிஜமாகவே உனக்கு திக்கிற பழக்கம் இருக்கா அப்படீன்னு கேட்டார். நான் இல்லை சார்ன்னு சொன்னேன். அப்புறம் எப்படி இப்படி நடிச்சே? நாகேஷ் பண்ணுவாண்டா இப்படி. அதுக்கப்புறம் நான் யாரும் இப்படி நடிச்சி பார்க்கலடான்னு சொன்னார். எனக்கு இதை சொல்றதுக்கு கூட கூச்சமா இருக்கு என்று நடிகர் மணிகண்டன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.