Actor Mammootty

பட யாத்ரா படத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கும் கேரக்டர், அட இது நம்ம தளபதி நடிச்ச கேரக்டர் ஆச்சே என உற்சாகமான விஜய் ரசிகர்கள்!

By Elango on மாசி 20, 2026

Spread the love

மலையாள சினிமாவில் மூத்த எழுத்தாளர் மற்றும் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தற்போது இயக்கி வரும் படம் பட யாத்ரா. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் மம்முட்டி நடித்து வருகிறார். கேரளாவில் பல்வேறு இடங்களில் படயாத்ரா சூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தில் மம்முட்டி டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார்.

அதாவது நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவருக்கு பணி வாய்ப்பு அதிகமாக இருந்தும் அதை மறுத்துவிட்டு பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிக்கு சென்று ஒரு சிறிய வீட்டில் கிளினிக் நடத்தும் ஒரு எளிமையான டாக்டராக இதில் மம்முட்டி நடித்திருக்கிறார். இதில் நோயாளிகளிடம் பணம் வாங்காமல், கிளினிக்கில் ஒரு உண்டியல் வைத்து அவர்களால முடிந்த பணத்தை அதில் போடுமாணு சொல்லும் கேரக்டரில் மம்முட்டி நடித்திருக்கிறார்.

   

தமிழ்நாட்டில் 5 ரூபாய் டாக்டர் என வாழ்ந்து மறைந்தவர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன். இந்த கேரக்டரில் ஏற்கனவே கத்தி என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இப்போது விஜய் நடித்த அதே மாதிரியான டாக்டர் கேரக்டரில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த கேரக்டரில் நடிகர் மம்முட்டி நடிப்பது தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.