Actor Mammootty

ரஜினிக்கு பிறகு அவரது மாஜி மருமகனுடன் கை கோர்க்கும்… பிரபல மலையாள நடிகர் – டி 55 லேட்டஸ்ட் அப்டேட் சுடச்சுட வந்தாச்சு!

By Elango on மாசி 4, 2026

Spread the love

கடந்த 1991ம் ஆண்டில் நவம்பர் 5ம் தேதி வெளியான படம் தளபதி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் பல படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார். குறிப்பாக ஆனந்தம் மறுமலர்ச்சி மக்கள் ஆட்சி அழகன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கிளிப்பேச்சு கேட்க வா என பல படங்களை சொல்லலாம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினியுடன் இணைந்த நடிகர் மம்முட்டி இப்போது ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் நடிகர் தனுஷ் நடிக்கும் டி 55 படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். ஏற்கனவே நடிகர் மம்முட்டி நடித்த கம்மத் அண்ட் கம்மத் என்ற மலையாள படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது தனுஷ் படத்தில் முக்கிய ரோலில் மம்முட்டி நடிக்கிறார் என்ற தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது.