அஜீத் தான் என்னோட கணவர்… ரொமான்ஸ் பண்ண நீ என் பக்கத்துல வராதே… பிரபல நடிகரை பார்த்து சொன்ன நடிகை ஷாலினி – இப்படி ஒரு சம்பவமும் நடந்ததா?

By Elango on மார்கழி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி ஷாலினி பல படங்களில் நடித்தார். பிறகு காதலுக்கு மரியாதை படத்தில் விஜயுடன் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த ஷாலினி, அமர்க்களம் படத்தில் அஜீத்குமாருடன் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அஜீத்குமார் – ஷாலினி திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மாதவன் கூறியதாவது, அலைபாயுதே ஷூட்டிங்கின் போது இது நடந்தது. அப்போது ஷாலினி என்னிடம், நான் அஜித்தை தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ ரொமான்டிக் சீனில் ஓவராக நடிக்காதே. என் பக்கத்தில் வராதே. தூரமா நில்லு போ என்று என்னிடம் நிறைய தடவை சொல்லி இருக்காங்க.

   

அதற்கு நானும் ஷாலினியிடம், ஹே… இங்க பாரு. எனக்கும் சரிதாவுடன் திருமணம் நடக்க போகுது. நீயும் என் பக்கத்துல வராதே என்று ஜாலியாக சொல்வேன். ஆனால் ஷாலினி என்னிடம் சொன்னது உணர்வுபூர்வமாக இருந்தது என்று நடிகர் மாதவன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் மாதவன் – ஷாலினி ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.