ஐயா ஜாலி, நானும் வாங்கிட்டேன் நீங்க இன்னும் வாங்கலையா?… மகிழ்ச்சியில் துள்ளி குதித்து மாதவன் வெளியிட்ட பதிவு..!!

By Nanthini on செப்டம்பர் 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் மாதவன். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் நடிப்பை தாண்டி இயக்குனராக ராக்கெட்டரி என்ற திரைப்படத்தின் மூலம் மாதவன் அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் திரைப்படமே இந்தியாவிலேயே சிறந்த படமாக தேசிய விருதை வென்றது.

   

இதனை தொடர்ந்து தேசப்பற்று அதிகம் கொண்ட மாதவன் தற்போது ஐபோன் 15 ஸ்மார்ட் போனை வாங்கி பெருமைப்படுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ராக்கெட்டரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் மாதவன் ஜிடி நாயுடு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

   

 

இந்த நிலையில் மாதவன் ஐபோன் 15 ஸ்மார்ட் போனை வாங்கி அதை தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், மேட் இன் இந்தியா என்பதால் பெருமையுடன் iphone 15 ஃபோனை தான் வாங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்தியாவில் சமீபத்தில் வெளியான ஐபோன் 15 ஸ்மார்ட் போன் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பல சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போனை வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போன் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

author avatar
Nanthini