அலைபாயுதே படத்துல அந்த சீன் எடுக்கும்போது இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாது… மனம் சிறந்த நடிகர் மாதவன்…!

By Nanthini on மார்ச் 1, 2025

Spread the love

மாதவன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய பிரபலமான புகழ் பெற்ற நடிகர் ஆவார். தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மாதவன் ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1996 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மாதவன்.

நடிகர் மாதவன் திருமணம் செய்ய விரும்பிய நடிகை.. யார் தெரியுமா?

   

2000 ஆம் ஆண்டு “அலைபாயுதே” திரைப்படத்தில் டித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் மாதவன். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. பேரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார் மாதவன். அதைத்தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், பிரியமான தோழி, ஜே ஜே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் மாதவன்.

   

Image tagged with alaipayuthey, shalini, R. Madhavan – @love-indian-actress  on Tumblr

 
2000 களின் ஆரம்ப பகுதியில் புகழ்பெற்ற நடிகராக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வம் வந்தார் மாதவன். ஆனால் 2000 நடுப்பகுதிக்கு பிறகு அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் சரியாக அமையவில்லை. இரண்டாம் நடிகராக நடித்து வந்தார். ஆனாலும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் .இப்படியான நிலையில் மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அலைபாயுதே திரைப்படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், அலைபாயுதே திரைப்படத்தில் இடம் பெற்ற “நான் உன்னை விரும்பல, நான் உன்னை ஆசைப் படல, நீ அழகாய் இருக்குன்னு நினைக்கல, ஆனால் எங்க இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு” என்ற டயலாக் உள்ள சீட் ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கும் போது என்னோட மனநிலை வேற மாதிரி இருந்துச்சு.
10 Memorable Moments From Mani Ratnam's Alaipayuthey, Which Turns 20 Today
ஏற்கனவே அந்த காட்சியில் கேமரா ட்ரைனுக்குள்ள இருந்துச்சு. நான் வெளியிலிருந்து பேசிட்டு இருக்கேன். பேசி முடிச்சதும் ரயிலில் கேமராவுக்கு தெரியிற மாதிரி அந்த சந்துல நான் ஓடணும். கரெக்டா நான் ஓடவில்லை என்றால் திரும்பவும் ட்ரெயின் பின்னாடி வந்து ஒரு மணி நேரம் ஆகும் அந்த சீன் எடுக்கறதுக்கு. அதனால அந்த டயலாக் பேசி முடித்ததும் நான் சரியா ஓடணும் என்கிற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்தது. ஆனா அந்த டயலாக் இவ்வளவு பேமஸ் ஆகும் என்று எனக்கு அப்போ தெரியாது என மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.