நாம எவ்ளோதான் GOOD-ஆ இருந்தாலும், இந்த உலகம் நம்மள BAD-ஆ ஆக்குது.. வெளியானது ‘GOOD BAD UGLY’ படத்தின் டீசர்.!

By Nanthini on மாசி 28, 2025

Spread the love

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தின் மீது பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் தொடங்கிவிட்டனர்.

குட் பேட் அக்லி' படத்தின் இரண்டாவது லுக் வெளியானது - அஜித் ரசிகர்கள் ஆரவாரம்! | Good bad ugly second look released ajith fans cheer - kamadenu tamil

   

ஏற்கனவே படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் கூறுகையில், இப்படத்தில் அஜித் குமாருக்கு மாசான காட்சிகள் நிறைய உள்ளது, ஆதிக் ரவிச்சந்திரன் பேன் வாயாக இருந்து இந்த படத்தை எடுத்துள்ளார். அஜித்தை முதல் சாட்டில் இயக்கிவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் கண்ணீர் சிந்தி அழுதுள்ளார் என ஜீவி பிரகாஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இது அஜித் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. மேலும் இப்படத்திற்கு தன்னுடைய கெரியர் பெஸ்ட் இசையை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். படம் குறித்து அதிகம் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் மத்தியில் பல அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றார்.

   

அஜித்தின் 'குட் பேட் அக்லி' ஏப்.10-ல் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு | Ajith Kumar Good Bad Ugly Release on Apr 10 - Official Announcement - hindutamil.in

 

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியான நிலையில் சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதிர அஜித்தின் ஸ்டைலுடன் மாஸாக இடம் பெறும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.