
CINEMA
‘காதலுடன் கழிந்த 30 வருடங்கள்’… அன்பு மனைவியுடன் தனது 30-வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் எம். எஸ். பாஸ்கர்… வெளியான புகைப்படம்…
நாடக நடிகராக திரைத்துறையில் தனது கலைப் பயணத்தை தொடங்கியவர் எம் எஸ் பாஸ்கர். இவர் விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர் தான் இவருக்கு நடிகராக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. இதற்கு இடையில் நல்ல குரல் வளம் கொண்டிருந்ததால் படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணிபுரிந்து வந்தார்.
1990 வாக்கில் நடிகர் பிரம்மானந்தத்திற்கு குரல் கொடுக்க தொடங்கிய இவர் இப்போது வரை அவருக்கு குரலாக ஒலிக்கிறார். ஆங்கில பிரம்மாண்ட படங்களான ஜுராசிக் பார்க், ஸ்பைடர் மேன் போன்ற படங்களிலும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு தமிழில் நல்ல உச்சரிப்பும், குரல் வளமும் இவர் கொண்டுள்ளார். சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
‘எங்கள் அண்ணா’ படத்தில் நடிகர் வடிவேலு, பாண்டியராஜுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தார். 2006ல் வெளியான ‘மொழி’ படத்தில் நடித்ததன் மூலம் நல்ல நடிகராக பெயர் பெற்றார்.இத்திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை வென்றார். சிம்புதேவனின் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் காட்டு ராஜாவாக நடித்து அசத்தினார். இவர் நடிப்ப்பில் 2017ல் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்பொழுது இவர் சிறந்த குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என திரையுலகில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு திருமணமாகி மகள் ஒருவர் உள்ளார். இந்தநிலையில் இன்று நடிகர் எம் எஸ் பாஸ்கர் தனது 30 வது திருமண நாளை தனது மனைவியுடன் கொண்டாடியுள்ளார். தனது அம்மா அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு அவரது மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.