
GALLERY
இந்த அழகுக்கு நாங்க அடிமை.. பிங்க் நிற உடையில் பார்பி டால் போல இருக்கும் பிக் பாஸ் ஜனனி… லேட்டஸ்ட் போட்டோஷூட்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு இலங்கை போட்டியாளர் கலந்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அதைப்போல முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.
இவரைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தற்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த ஜனனியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார். இவருக்கும் தற்பொழுது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் மிகவும் பொறுமையாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாராம். சமீபத்தில் இவர் விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்திருந்தார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது மெழுகுசிலை போல அழகாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது.