Connect with us

நிறைய பேர் துரோகம் பண்ணிருக்காங்க.. அப்பா இறந்தப்போ.. பல விஷயங்களை பகிர்ந்த மறைந்த நடிகர் குமரி முத்துவின் மகள்..!!

CINEMA

நிறைய பேர் துரோகம் பண்ணிருக்காங்க.. அப்பா இறந்தப்போ.. பல விஷயங்களை பகிர்ந்த மறைந்த நடிகர் குமரி முத்துவின் மகள்..!!

 

மறைந்த நடிகர் குமரிமுத்து தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு தனது 75 வயதில் குமரிமுத்து உயிரிழந்தார். இந்நிலையில் குமரிமுத்துவின் மகள் எலிசபெத் குமரிமுத்து சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையில் இப்படி ஒரு வாசகமா? - என்ன தெரியுமா? – News18 தமிழ்

   

அவர் கூறியதாவது, அப்பா ரொம்ப அன்பாக இருப்பார். 14 வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக அப்பா சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார். சாப்பிட சாப்பாடு இல்லாமல் நடைபாதையில் தான் படுத்து இருப்பார். நாடகத்தில் நடித்த போது கஷ்டத்தில் தவித்த பலருக்கு அப்பா உதவி செய்துள்ளார். அப்பா ஒரு கடைக்கு அருகே தூங்குவாராம்.

இந்த சிரிப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் போராட்ட குணம் யாருக்குத் தெரியும்? | Tamila actor kumari muthu speciel story - Vikatan

மறுநாள் காலை 4 மணிக்கு எழுந்திருக்கவில்லை என்றால் அந்த கடை உரிமையாளர் அப்பா மீது தண்ணீரை ஊற்றுவாராம். இதெல்லாம் அப்பா வந்து எங்களிடம் சொல்வார். சுமார் 70 வயது வரை அப்பா சினிமாவில் தான் இருந்தார். அப்பாவின் சிரிப்பை வைத்து அவரை அடையாளம் செய்கிறார்கள். ஆனால் அப்பா வீட்டில் ஒரு நாளும் அப்படி சிரிப்பதில்லை. சினிமாவில் மட்டும் தான் அப்படி சிரிப்பார். அப்பா மாதிரி யாராலும் தானம் செய்ய முடியாது.

Kumari Muthu Daughter Emotional Speech | குமரிமுத்து

எங்களுக்காக எதுவும் சேர்க்கவில்லை அத்தனையும் தான தர்மம் செய்தார். ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால் 45 ஆயிரம் ரூபாயை தானமாக கொடுத்து விடுவார். ஒரு மாதத்திற்கு 40 குடும்பங்களுக்கு அப்பா பணம் அனுப்புவார். அதற்காகவே ஒரு டிரஸ்டையும் நடத்தினார். அப்பா சொத்து சேர்க்கவில்லை என்ற வருத்தம் எங்களிடம் இல்லை. ஒருபோதும் சினிமாக்காரர்களை அப்பா வீட்டிற்குள் அனுமதிப்பதே இல்லை யாரையும் அழைத்து வருவதும் இல்லை.

சிரிப்பால் பிரபலமான நடிகர் குமரி முத்து காலமானார் - Comedy actor Kumari muthu passed away - Samayam Tamil

என் அப்பா அவரது வாழ்க்கையில் நிறைய துரோகங்களை சந்தித்துள்ளார். ஒருவர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தில் இருப்பவர்கள்தான் அழுவார்கள். ஆனால் அப்பா இறந்தபோது நிறைய குழந்தைகள் வந்து தாத்தா என்று சொல்லி அழுதார்கள். பின்னர் விசாரிக்கும் போது தான் தெரிந்தது அனைவருக்கும் அப்பா உதவி செய்துள்ளார் என எலிசபெத் எமோஷனலாக பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top