‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் பரபரப்பான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட நடிகர் குமரன்… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது டி ஆர் பியிலும்  முன்னணி இடத்தை பிடித்துள்ளது.  தற்பொழுது இந்த சீரியலில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கதிரின் வீட்டிற்கு திரும்பவும் வந்துள்ளனர்.

   

இதை அறிந்த மூர்த்தி கோபப்படுகிறார் .அண்ணன் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் கதிர் எடுத்த இந்த முடிவை மூர்த்தி ஏற்றுக் கொள்வாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வரும் இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன்.

இவர் பல்வேறு சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸில் வரும் கதிர் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.

தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் குமரன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணனை அடித்ததற்காக பேங்க் ஆபீசர்களை தான் திருப்பி அடிக்கும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…