தங்களது குட்டி தேவதையின் அழகிய தருணங்களை வீடியோவாக வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்.தற்போது இவர்களையும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக பலர் பார்க்கின்றனர். வெள்ளித்திரை நடிகைகள், நடிகர்கள் பலர் தற்பொழுது சின்னத்திரை சீரியல் நடிகர்களாக மாறி வருகின்றனர்.

   

அப்படி ராஜா ராணி, தங்கம், கல்யாண முதல் காதல் வரை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் நடிப்பை தவிர்த்து நாய்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்பொழுது நடிகை ஸ்ரீதேவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரான ‘பொன்னி’யில் நடித்து வருகிறார்.

இவர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது சித்தாரா என்ற குழந்தையும் உள்ளது.. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் இரவு நேரத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் ஜாலியாக பைக்கில் சென்று தனது குழந்தையுடன் இருந்த மகிழ்ச்சியான தருணத்தை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….