#image_title
3100 கோடி சொத்து மதிப்புகளை கொண்ட இந்தியாவின் பணக்கார வாரிசு நடிகர் யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான். ஹிந்தியில் பொதுவாக நெப்போடிசம் என்பது அதிக அளவு இருக்கின்றது. தமிழில் இது பெரிய அளவில் இல்லை என்றாலும், தெலுங்கு சினிமாவை பொறுத்தவரையில் நெப்போடிசம் அதிக அளவு இருந்து வருகின்றது.
வாரிசு நடிகர், நடிகைகளுக்கு அங்கு அதிக அளவு முக்கியத்துவம் இருக்கும். திறமை இருந்தாலும் ஒரு சில நடிகர்களால் முன்னுக்கு வர முடியாது. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா போன்றவர்கள் எல்லாம் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பகாலகட்டத்தில் இவர்கள் எதிர்கொள்ளாத விமர்சனங்களை இல்லை என்று கூறலாம். அதையெல்லாம் முறியடித்து தற்போது முன்னணி நடிகர்களாக வளம் வருகிறார்கள்.
பாலிவுட்டில் பல பணக்கார வாரிசு நடிகர்கள் இருந்தாலும் முதலிடத்தில் இருப்பது நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான். 3100 கோடி சொத்து மதிப்புடன் இருந்து வருகிறார். இவரது தந்தை ராகேஷ் ரோஷன் பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். தனது தந்தை மூலமாக சினிமாவில் எளிதில் நுழைந்தாலும் பல தோல்விகளை கண்டு தற்போது மாஸ் நடிகராக கலக்கி வருகிறார்.
ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். மற்ற வாரிசு நடிகர்களை விட இவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம். அதற்கு காரணம் இவருடைய பிசினஸ் தான். இவர் ஹச்ஆர்எக்ஸ் எனும் ஸ்போர்ட்ஸ் ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வரும் ஹிருத்திக் ரோஷன் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்தாலும் மிகவும் எளிய முறையில் காணப்படுவார். இவர் தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் சேர்ந்து வார் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…