தனது நெருங்கிய தோழியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்த முதல் நீ முடிவும் நீ பட நடிகர்.. வெளியான புகைப்படங்கள்..!!

By admin on பங்குனி 28, 2024

Spread the love

முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கிஷன் தாஸ். இவர் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என முயற்ச்சித்து வருகிறார்.  விஸ்காம் படித்து முடித்த கிஷன் தாஸ் நாடகம் நடிப்பில் ஈடுபாடோடு இருந்துள்ளார்.

   

கல்லூரியில் படித்து முடித்த பிறகு youtube சேனலில் ஸ்கிரிப்ட் எழுதவும், திரைப்பட விமர்சனம் செய்யவும் தொடங்கினார். வாய்ப்புகளை தேடி அலைந்தபோது கிஷன் தாசுக்கு முதல் நீ முடிவும் நீ படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

   

 

அந்த பாடலை வைத்து தான் எங்கே சென்றாலும் கிஷனை அடையாளம் கண்டு பேசுவார்கள். ஆர்.ஜே பாலாஜி உடன் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் கிஷன் நடித்துள்ளார். கிஷன் தாசின் அம்மா பிருந்தா தாசும் சீரியல் நடிகை தான். netflix-கான யூட்யூபில் மெனு ப்ளீஸ் என்ற பிரபல நிகழ்ச்சியும் கிஷன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிலையில் கிஷன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது நெருங்கிய தோழியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kishen Das (@kishendas)