ஒரு வேளைக்கு 22 மாத்திரை ; ரோபோ ஷங்கர் பட்ட கஷ்டம்….. முதல்முறையாக ரகசியம் பகிர்ந்த ப்ரியங்கா சங்கர்

By Deepika on மார்ச் 28, 2024

Spread the love

சின்னத்திரையில் அறிமுகம் ஆகி வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்த்ரஜாவும் நடிகை ஆவார். பிகில், விருமன் போன்ற படங்களில் நடித்து உச்சத்திற்கு சென்றார். திடீரென ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்பட்டார். அவருக்கு ஏதோ பிரச்சனை என இஷடத்துக்கு பேச அராம்பித்து விட்டார்கள்.

Indraja shankar marriage

அதேசமயம் அவர் மகள் இந்த்ரஜாவுக்கு தாய் மாமனுடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்தது. அவ்வளவுதான் ரோபோ சங்கர் இறக்கும் தருவாயில் உள்ளார், அதனால் தான் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நிச்சயம் ஆகிறது என சொன்னார்கள். இந்தநிலையில் இந்த்ரஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

   
   

இதுகுறித்து தற்போது சில விஷயங்களை பேசியுள்ளார் ரோபோ சங்கரின் மனைவி ப்ரியங்கா. அவர் கூறுகையில், சங்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது உண்மைதான். ஆனால் அதற்காக மகளுக்கு திருமணம் செய்யவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பே நாங்கள் இதுகுறித்து முடிவு செய்துவிட்டோம். அதற்குள் இவருக்கு உடல்நிலை இப்படி ஆகிவிட்டது.

 

Priyanka shankar about robo shankar health

இதற்காக நாங்கள் திருமணம் நிச்சயித்திருந்தால் அப்போதே திருமணம் நடந்திருக்கும். சங்கர் வந்து தாலி எடுத்து திருமணம் நடத்தி வைப்பார் என நாங்கள் நம்பினோம். அதேபோல் திருமணம் நடந்தது. சங்கர் ஒரு வேளைக்கு 22 மாத்திரைகள் சாப்பிடுவார், அவ்வளவு கஷ்டமாக இருக்கும். அவர் குடிக்கும் கஷாயத்தை நான் காய்ச்சிம்போது அது அவ்வளவு கசப்பான வாடை கொடுக்கும். ஆனால் அதை முகம் சுளிக்காமல் பருகுவார்.

ஆண்டவன் அருளால் அவர் குணமாகி விட்டார், தயவு செய்து யாரும் தவறாக பேசாதீர்கள். அவரவர் கஷ்டம் அவருக்குத்தான் தெரியும். கண்டபடி எழுதாதீர்கள். அவரை பற்றி அவதூறாக பலர் வீடியோ போட்டனர், அப்போது கூட அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார் ரோபோ சங்கர் மனைவி ப்ரியங்கா.