Actor Kiccha Sudeep

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அந்த சம்பவம் … புகை பிடிக்கும் பழக்கத்தை உடனே கைவிட்ட நடிகர் கிச்சா சுதீப்!

By Elango on மாசி 21, 2026

Spread the love

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். பாகுபலி புலி ஈ போன்ற பல படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் கூறியதாவது, ஒருமுறை சூட்டிங் போன போது சிகரெட் பாக்கெட்டை விட்டுட்டு போயிட்டேன். அங்க போனா எந்த கடையும் இல்லை. அங்கிருந்த ஒருத்தர் கிட்ட சிகரெட் வாங்கி புகைத்தேன். அது ரொம்பவும் தரம் இல்லாத ஒரு பிராண்ட். நான் எப்பவும் ஒரே பிராண்ட் சிகரெட் தான் பிடிப்பேன்.

வீட்டுக்கு வந்ததற்கு அப்புறம் அதுபற்றி யோசித்தேன். ஒரு பிராண்டுக்கு அடிமையாகலாம். அதுக்கும் கீழ போய் அந்த சிகரடெ்டை எப்படி நான் பிடிச்சேன்? அதுவும் கிடைக்கலைன்னா பீடி பிடித்து இருப்பேனான்னு யோசிச்சேன். பழக்கம் வேற அடிக்‌ஷன் வேற. எனக்கு அது அடிக்‌ஷனா மாறுச்சுன்னு தோணிச்சு. அன்னைக்கு சிகரெட்டை விட்டேன். சினிமாவுல கூட சிகரெட் பிடிக்கிற சீன் வந்தால் கூட புகையை உள்ள இழுக்க மாட்டேன் என்று நடிகர் கிச்சா சுதீப் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.