கவினின் ‘ஸ்டார்’ படம்.. ஹிட்டா, இல்ல ஃபிளாப்பா..! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

By Mahalakshmi on வைகாசி 11, 2024

Spread the love

நடிகர் கவின் நடிப்பில் நேற்று வெளியான ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்களில் நடித்து வந்த இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றார்.

   

பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அந்த வகையில் இவர் நடித்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்திருந்த திரைப்படம் தான் ஸ்டார்.

   

 

இந்த திரைப்படம் நேற்று வெளியானது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் தொடர்ந்து இப்படத்தைக் காண மக்கள் திரையரங்குகளில் குவிந்து வந்தனர். ஆனால் முதல் நாளில் சொல்லும் அளவிற்கு வசூல் சாதனை செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும் மற்ற படங்களுக்கு ஏதோ பரவாயில்லை என்று கூறிக் கொள்ளலாம். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் மற்றும் நடிகர் கவின் நடிப்பு மட்டுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது.

ஆரம்பித்தது ஒரு கதை, அதை விட்டுவிட்டு கடைசி வரை ஆரம்பத்திலேயே சுற்றி சுற்றி படத்தை எடுத்து வைத்திருக்கின்றார் இயக்குனர் இலன். இது ரசிகர்களை சற்று போரடிக்க செய்தது. சினிமாவை விரும்பி பார்க்கக் கூடிய ரசிகர்கள் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம். இரண்டாம் பாதியில் முழுவதும் தொய்வுகள் இருப்பதால் சற்று எரிச்சலை கொடுத்துள்ளது. கவின் ஸ்டார் திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரளவு சுமாரான படமாகவே இருந்துள்ளது.

ஏற்கனவே இரண்டு வெற்றிகளை கொடுத்த கவின் இப்படத்தின் மூலம் ஹார்ட்ரிக் வெற்றியை கொடுத்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகம்தான். முதல் நாளில் இந்த படம் தமிழ்நாட்டில் இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்தும் பிற மாநிலங்களில் 75 லட்சம் வசூல் செய்து மொத்தம் 2. 75 கோடி வசூலை பெற்றிருக்கின்றது. கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் அளவுக்கு இப்படம் வசூல் செய்யாது என்று கூறப்பட்டு வருகின்றது.