Categories: CINEMA

ஐஸ்வர்யா ராஜஷும் இல்ல, அறந்தாங்கி நிஷாவும் இல்ல.. அந்த லேடி கெட்டப் போட்டதே இவர இன்ஸ்பயர் பண்ணி தான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக அறிமுகமான கவின் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலமாக மிகவும் பிரபலமானார். பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின், சாண்டி மாஸ்டர், முகின் என டீமாக இருந்து செய்த ரகளைகள் இன்றளவும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. பின்னர் டாடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றார்.

நடிகர் கவின் தற்போது பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் ஸ்டார் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பிரஸ்மீட் ஒன்று நடைபெற்றது. இதில் பல கேள்விகளுக்கு நடிகர் கவின் பதில் அளித்திருந்தார். டாடா படத்திற்கு பிறகு ஸ்டார் படத்துக்கு இலன் கதை சொல்ல வந்தார். இந்த கதை எனக்கு தானாக அமைந்தது. இயக்குனர் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ரொம்ப பொறுமை வேண்டும் என்பது போகப் போகத்தான் புரிய வந்தது.

மேலும் கரீனா சோப்ரா தான் இந்த லேடி கெட்டப்புக்கான இன்ஸ்பிரேஷன் என்று கூறியிருந்தார். அதாவது சந்தானம் ஒரு திரைப்படத்தில் லேடி கெட்டபில் நடித்து சூப்பராக அசத்தியிருப்பார். அவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷனாகி தான் இந்த படத்தில் நான் லேடி கெட்டப் போட்டதாக கூறியிருந்தார். மேலும் பலரும் ஐஸ்வர்யா ராஜேஷ் போல் உடையும், அறந்தாங்கி நிஷா போல் பேச்சும் இருப்பதாக கூறி இருந்தார்கள். மூன்றாவதாக ஒன்றைக் கூட கூறி இருந்தார்கள் என மிகவும் கலகலப்பாக பேசியிருந்தார் நடிகர் கவின்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

2 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

2 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

4 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

9 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

23 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

1 day ago