தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சீரியலில் கிடைத்த பிரபலம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்த இவர், ‘நட்புனா என்னன்னு தெரியுமா’ திரைப்படத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். வினித் வரபிரசாத் என்பவர் இயக்கத்தில் கவின் ‘லிப்ட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றிகனியை பறித்துள்ளார் நடிகர் கவின்.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் கூட பட குழுவை அழைத்து பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவின் தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்….

