Categories: சினிமா

17 வருடங்களுக்கு பிறகு உருவாகும் ஜில்லுனு ஒரு காதல்- 2.. சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க போகும் ரைசிங் ஸ்டார்..

Spread the love

சூர்யா-ஜோதிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் கொடுத்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். தொடர்ந்து ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கைவசம் நான்கு படங்களை வைத்து இருக்கின்றார்.

நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பகர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அதைத்தொடர்ந்து நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார் கவின்.

அது மட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனரான விஷ்ணு இடவன் இயக்கத்தில்  புதிய திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக கவின் நடிக்கின்றார். இப்படி தொடர்ந்து சினிமாவில் பிஸியாக வலம் வரும் கவின் தற்போது ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தை ஓபெல்லி என் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் இன்று வரையில் பலரின் பேவரிட் படங்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த படத்திற்கு பிறகு தான் சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது பல ரசிகர்களின் கனவு கண்ணனாக சாக்லேட் பாயாக இருந்தவர் சூர்யா.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டுக் கொடுத்தது. இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ப்ரெண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் இப்படத்தில் இரண்டாவது பாகத்தில் நடிகர் கவினை ஹீரோவாக களம் இறக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகளின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahalakshmi

Recent Posts

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

3 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

13 minutes ago

“ஈரான் மொத்தமும்… எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது…” டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…

26 minutes ago

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

48 minutes ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

60 minutes ago

“தொழிலதிபர் கணவர் பிணமாக காரில் சாய்ந்திருக்க…” அருகில் ஐடி காதலனுடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்…! மிரண்ட போலீசார்…. வெளியான பகீர் பின்ணணி…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…

1 மணத்தியாலம் ago