இந்த சிறுவயது புகைப்படத்தில் தனது அப்பாவுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா…?  அதுக்குள்ள கண்டுபுடிச்சிடீங்களா…?

By Begam on ஐப்பசி 4, 2023

Spread the love

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் 2013ம் ஆண்டு நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கதிர். பின் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் மக்கள் கவனிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது பரியேறும் பெருமாள்.

   

இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் பிகில், தலைக்சுத்தல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நடிகர் கதிர் 2018ல்  சஞ்சனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

   

 

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படங்களை பகிர்ந்து அவர்கள் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் கதிர் தனது சிறுவயதில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.