நடிகர் சூர்யாவின் சகோதரரான கார்த்தி ”பருத்திவீரன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருது படமாக அவருக்கு அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதை தொடர்ந்து மெட்ராஸ், தோழா, தீரன், கைதி என வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து பிரபலமானார்.

#image_title
சிறந்த கதை தேர்வு, அருமையான நடிப்பு என மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகியது. அவை பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் இந்த மூன்று படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து ‘ குக்கூ’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து தனது 26-வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி தனது 27-வது படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்திக் ரஞ்சனி என்பவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்பொழுது ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. தற்போது கார்த்தி மற்றும் அவரது மனைவியின் ரஞ்சனியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்….
View this post on Instagram
