BREKAING: தேவா மறைந்த சோகம் விலகுவதற்குள்… அடுத்தடுத்த மரணத்தால் அதிரும் இசையமைப்பாளர் குடும்பம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!

By Nanthini on ஐப்பசி 20, 2026

Spread the love

திரைப்பட நடிகர் கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக தனது 37 வது வயதில் காலமானார். மறைந்த பிரபல இசையமைப்பாளர் சபேஷின் மகனும், இசையமைப்பாளர் தேவாவின் அண்ணன் மகனுமான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது அகால மரணம் தமிழ்த் திரையுலகினர் மற்றும் குடும்பத்தினர்டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘வல்லவன்’, ‘உதயம் NH4’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘குளிர் 100 டிகிரி’ மற்றும் ‘பட்டத்து யானை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு நண்பராக நடித்து கார்த்திக் சபேஷ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். குறிப்பாக, குணச்சித்திர மற்றும் துணை கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனி முத்திரையைப் பதித்த இவரது நடிப்புத் திறமை, பல படங்களுக்கு கூடுதல் பலம் சேர்த்ததுடன் சினிமா வட்டாரத்தில் இவருக்கு நல்லதொரு அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்தது.

   

திரையுலகில் தனக்கென ஒரு பயணத்தை அமைத்துக் கொண்டு வலம் வந்த கார்த்திக் சபேஷின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த அக்டோபர் 17-ம் தேதி இசையமைப்பாளர் தேவா காலமான சோகம் நீங்குவதற்குள், அடுத்த சில நாட்களில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர் கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருப்பது பேரிடியாக அமைந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரில் சென்றும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.